'லாரியிலே ஐந்நூறு டின் கெரசின் வந்திருக்கு.
வீட்டுத் தோட்டத்திலே குழி தோண்டிப் புதைச்சி
வை!' என தம் ஊழியரிடம் சொன்னார் முதலாளி.
உடனே அதை நிறைவேற்ற அவ்விடம் விட்டு
அகன்ற ஊழியன், ஒரு மணி நேரம் கழித்துத்
திரும்பி வந்தான்.
'அதுக்குள்ளே முடிஞ்சதா?' என முதலாளி
ஆச்சரியத்தோடு கேட்டார்.
'ஆமா, எஜமான்! எல்லாத்தையும் குழிதோண்டிப்
புதைச்சிட்டேன். ஆனா, அதிலே ஒரு சந்தேகம்!'
என்றவாறே தலையைச் சொறிந்தான்.
'என்ன! சந்தேகமா? அது வரக்கூடாதே! கேளு,
உன் சந்தேகத்தை என்றார் முதலாளி.
'ஒண்ணுமில்லே எஜமான். காலி டின்களையெல்லாம்
எங்கே அடுக்குறது?' என அப்பாவியாகக் கேட்டான்
ஊழியன்.
\\\\\\\\\\
பெர்னாட்ஷாவும் அவரது நண்பரும் ஒருமுறை
ரயிலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தனர்.
பெர்னாட்ஷாவுடன் பயணம் செய்த நபர்
அவ்வப்போது இயற்கைக் காட்சிகளை ரசித்துவிட்டு
அளவுக்கு மீறிய நிலையில் அந்தக் காட்சிகளைப்
புகழ்ந்துகொண்டு வந்தார்.
இது ஷாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
ஒரு மலைக்குன்றைப் பார்த்த அந்த நண்பர், 'ஆ!
என்னே இயற்கையான எழில்! இதை ரசிப்பதற்கு
எவ்வளவு சன்மானம் வேண்டுமானாலும் தரலாமே!'
என்றார்.
ஏற்கெனவே கடுப்பில் இருந்த ஷா, எழுந்து
ஓடிப்போய், அபாயச் சங்கிலியைப் பற்றி இழுத்தார்.
ரயில் நின்றுவிட்டது.
'நண்பரே! இதற்கு ஐந்து பவுன்கள்தாம் தரவேண்டும்.
எனினும் பரவாயில்லை. நீங்கள் அந்தத் தொகையை
உரியவர்களிடம் கொடுத்துவிட்டு, தொடர்ந்து
உங்கள் இயற்கைக் காட்சியை நன்றாக ரசியுங்கள்!'
என்றாரே பார்க்கலாம்.
\\\\\\\\\\
பிரபல வக்கீல் எர்லி நார்ட்டன். இவர் ஒருமுறை
கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருந்தபோது,
வெளியே ஒரு நாய் குரைத்தது. உடனே நீதிபதி,
'ஒரு சமயத்தில் ஒருவர் பேசினால் நல்லது!'
என்றுகூற, பலத்த சிரிப்புச் சத்தம் கோர்ட்டை
நிறைத்தது.
சரியான பதிலடி கொடுக்க, நார்ட்டன் மனத்தில்
முடிவெடுத்தார்.
விவாதம் முடிந்து நீதிபதி தீர்ப்பை வாசிக்க
ஆரம்பித்தார். இம்முறையும் சொறி நாய் குரைத்தது.
'இந்த அறையில் அதனுடைய எதிரொலி
கேட்கிறது!' என்றார் வக்கீல். நீதிபதியின் முகம்
இருண்டது. செம நோஸ்கட்.
கோர்ட்டில் எழுந்த சிரிப்புச் சத்தம் அடங்க
வெகுநேரம் ஆனது.
\\\\\\\\
சில SMS குறும்புகள்...
உன்னைப் பத்தி ஒருத்தன் தப்பா சொன்னான்.
உடனே அவனை நான் பளார்னு அறைஞ்சிட்டேன்.
அவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் கோபம்
கோபமா வரும்.
அப்படி என்ன சொன்னான்னு கேட்கிறியா?
நீ தினமும் குளிப்பியாம். பார்த்தியா இதப் படிக்கிற
உனக்கே எவ்வளவு கோபம் வருது! எனக்கு வராதா?
\\\\
விழிப்போம் என்ற நம்பிக்கையில்
தூங்குவதைவிட
காலையில் குளிப்போம்
என்ற லட்சியத்தோடு
எழுந்திரு!
\\\\\
பையன் தந்தையிடம் கேட்டான்.
'அப்பா! அப்ளிகேஷன் ஃபார்ம்ல, 'தாய்மொழி'ன்னு
(Mother Tongue) போட்டிருக்கே. அதுல என்ன
எழுத?'
தந்தையோ பையனிடம், 'ரொம்ப நீளம்னு எழுது'
என்றார்.
\\\\\
பொண்ணு புடிச்சா
லவ் பண்ணு
அரியர் வச்சா
க்ளியர் பண்ணு
பணம் இருந்தா
செலவு பண்ணு
மானம் ரோசம் இருந்தா
தினம் SMS பண்ணு.
\\\\
Wednesday, December 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
About Me

- சைதை முரளி
- பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
1 comment:
very nice
Post a Comment