
'ஹே ராம், ஹே ராம், ஹே ராம்!' என்று கூறியவாறே இன்று காந்திஜி தன் இன்னுயிரை
நீத்த தினம்.
'உண்மைக்காக எதை வேண்டுமானாலும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் ஒருபோதும் உண்மையைத் துறக்கக் கூடாது' என்று கூறி அவ்விதமே வாழ்ந்தவர் மகாத்மா.
'செய் அல்லது செத்துமடி!' என்ற வீரவசனத்துக்கேற்ப வாழ்ந்து காட்டியவர்.
நினைவு தினத்திலும் பிறந்த தினத்திலும் மட்டுமல்ல, எந்நாளுமே நினைக்கும் அளவுக்கு பிறருக்காக வாழ்ந்தவர்.
இந்தப் புத்தாண்டின் வாழ்த்தாக, எழுத்தாளர்கள் சுபா எனக்கு(ம்) அனுப்பிய காந்திஜி ஓவியத்தைத் தாங்களும் கண்டு மகிழ இங்கு தந்துள்ளேன்.
2 comments:
காந்தி ஓவியம் அருமை முரளி. எழுத்தாளர்கள் சுபா எப்போதுமே புதுமையாய் சிந்திப்பவர்கள்..எனக்கும் அனுப்பி இருக்கிறார்கள். அதை இப்படி வலையில் பதிக்க எனக்குத்தோன்றவில்லை..நீங்கள்அண்ணலின்
நினைவுதினத்தில் பதிவு செய்தது சிறப்பு.(தாமதமாய் பார்க்க நேர்ந்து தாமதமாய் மடல் இடுகிறேன் மன்னிக்க)
ஷைலஜா
நன்றி ஷைலஜா.
Post a Comment