Tuesday, December 19, 2006

பள்ளிக் குறும்பு!

பள்ளியிறுதி வகுப்பு (+2).

மாந்தோப்புப் பள்ளிக்கூடம் என்றறியப்படும் சைதை
மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
படித்துக்கொண்டிருந்தேன்.

கோ எஜுகேஷன்.

பள்ளியிறுதி வகுப்பை முடித்து விடைபெறும்
பொருட்டு நடைபெறும் ஆண்டுவிழாவும் வந்தது.
அப்போது நான் சபரிமலை செல்வதற்காக மாலை
போட்டிருந்தேன்.

ஆண்டுவிழாவில் என் வகுப்பு நண்பர்கள் என்னைப்
பாடும்படி வற்புறுத்தினர். ஏனெனில் பள்ளி வகுப்பில்,
தனியாக சமயங்களில் தெய்வீகப் பாடல்களை
அவ்வப்போது பாடுவது வழக்கம்.

இதை மனத்தில் நினைந்துகொண்டே என் வகுப்புத்
தோழர்கள் என்னை மேடையேற்றினர்.

படிக்காதவன் திரைப்படம் வெளிவந்திருந்த சமயம்
அது. அதில் வரும் 'ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்,
உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி!' என்ற பாடல்
ஏனோ அச்சமயம் என்னை இம்ப்ரஸ் செய்திருந்தது.

இப்பாடலையே ஆண்டுவிழாவில் பாடிவிட்டு,
மேடையை விட்டுக் கீழிறங்கினேன். இதற்கு நல்ல
வரவேற்பும் இருந்ததை கூடியிருந்தவர்களின்
கைத்தட்டலின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது(?!)

தலைமையாசிரியர் என்னைப் பார்த்துச் சிரித்தார்.
காரணம், நான் அப்போது அணிந்திருந்த ஐயப்ப
உடை.

மேடையை விட்டு இறங்கியதுதான் தாமதம்.
கூடியிருந்த வகுப்பு நண்பர்கள் என்னைச்
சூழ்ந்துகொண்டு, 'அடப்பாவி! இப்படி
ஏமாத்திட்டியேடா!' என டின் கட்டினர்.

அந்தக் குறும்பை இப்போது நினைத்தாலும் என்
மனத்தில் புன்னகை அரும்பு விடும்.

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.